Load Image
dinamalar telegram
Advertisement

24 மணி நேரமும் செயல்படும் வகையில் மதுரை ஏர்போர்ட் மேம்படுத்தப்படுமா?


நாற்பதாண்டுகளில் மதுரை நகரம் மக்கள் தொகை முதல் தொழில், சுற்றுலா, விவசாயம் என, பெரிய வளர்ச்சியை பெற்றுவிட்டது; நகரும் நாலாபுறமும் விரிவடைந்துவிட்டது. பஸ், ரயில் போக்குவரத்துகள் விரிவடைந்த அளவிற்கு விமான சேவை அதிகரிக்கவில்லை. விமான நிலையம் மட்டும், 'கஸ்டம்ஸ்' நிலையமாக அப்படியே இருக்கிறது.

Latest Tamil News

மதுரை நகரம் மட்டுமின்றி, 10க்கும் மேற்பட்ட தென்மாவட்டங்களுக்கு சேவை அளிக்கும் மதுரை விமான நிலையம் சர்வதேச அந்தஸ்துக்கு வளர்ந்திருக்க வேண்டும். அது இன்று வரை கானல் நீராக உள்ளது. தற்போதைய நிலையில் இங்கு காலை, 5:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரையே விமான சேவை உள்ளது. தினமும் நான்கு தனியார் விமான நிறுவனங்களின், 16 சேவைகள் மட்டுமே நடக்கிறது.

633 ஏக்கர் நிலம்



வெளிநாடு என்ற வகையில் கொழும்பு, சிங்கப்பூர், துபாய்க்கு மட்டுமே இங்கிருந்து விமானங்கள் சென்று திரும்புகின்றன. அந்நாடுகளின் விமானங்கள் இங்கு வருவதில்லை. விதிவிலக்காக இலங்கையின் கொழும்புவில் இருந்து அந்நாட்டு விமானம் மட்டுமே இங்கு வந்து செல்கிறது. இந்த வெளிநாட்டு நகரங்களுக்கு செல்வதை விட, மலேஷியா உட்பட வேறு நாடுகளுக்கு நேரடி விமான சேவை தேவை என, வர்த்தகர்கள் விரும்புகின்றனர். அவ்வாறு இருந்தால் பிற சர்வதேச நாடுகளுக்கு அங்கிருந்து இணைப்பு கிடைக்கும். மதுரையில் இருந்து எளிதாக வெளிநாடுகளுக்கு பயணியர் சரக்குகளை அனுப்ப முடியும் என்கின்றனர்.இந்த விமான நிலைய மேம்பாட்டுக்காக, 550 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக சமீபத்தில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். மதுரை விமான நிலையம், 520 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இங்கு 2.7 கி.மீ., நீளத்தில் ரன்வே உள்ளது. தற்போது விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணியில் தமிழக அரசின் நிதியாக மட்டுமே, 200 கோடி ரூபாய் செலவில், 633 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி, விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. விரிவாக்க பணியில் ரன்வேயின் நீளம் மேலும், 2 கி.மீ.,க்கு நீட்டிக்கப்பட உள்ளது. தற்போதுள்ள சுற்றுச்சுவரை கூடுதல் நிலத்திற்கேற்ப இடத்தை மாற்றி கட்ட, 35 கோடியில், 15 கி.மீ.,க்கு கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது.மதுரை விமான நிலையத்தின் பாதுகாப்புக்கு, 250 மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் உள்ளனர். இவர்கள் காலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பணியை கவனிக்கின்றனர். இங்கு பகலில் மட்டுமே உள்நாட்டு விமான சேவை உள்ளதால், இரு ஷிப்டுகளில் பணியாற்றுகின்றனர்.
Latest Tamil News

சர்வதேச அந்தஸ்து



சர்வதேச அந்தஸ்து கிடைத்தால் வெளிநாட்டு விமானங்களின் வருகை நேரத்திற்கேற்ப, 24 மணி நேரமும் நிலையம் இயங்கும். அந்நாடுகளில் பகலில் கிளம்பினால் இங்கு நள்ளிரவு, அதிகாலையில் விமானங்கள் வரும் என்பதால், நாள் முழுக்க நிலையம் செயல்படும். அதற்கேற்ப கூடுதல் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கூடுதல் ஒரு ஷிப்ட் பணியாற்ற வேண்டியதிருக்கும். பயணியர் டிக்கெட்டிலேயே இதற்கென கட்டணம் உள்ளதால், கூடுதல் நிதி எதுவும் மத்திய அரசு செலவிட தேவையில்லை.மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணியர், காய்கறி, பழங்கள், பூக்கள், ஆயத்த ஆடைகள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், மருந்துகள் என பலவும் அதிகளவில் வெளிநாடுகளுக்கு செல்கின்றன. இந்த காரணத்தால் விமான நிலையத்தின் தரம் உயர்வது அவசியமாகிறது.ஒரு விமான நிலையம் சர்வதேச அந்தஸ்து பெற அந்நிலையம், 24 மணி நேரமும் இயங்குவதாக இருக்க வேண்டும். மதுரையில் இருந்து எந்த விமானமும் நேரடியாக புறப்பட்டுச் செல்வதாக இல்லை. ஏனெனில், இங்கு இரவு 9:00 மணிக்குபின் விமான நிலையமே மூடப்பட்டுவிடுவதால் விமானங்கள் சென்னை சென்றுவிடுகின்றன. மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பி வந்து மதுரை பயணியரை ஏற்றிச் செல்கின்றன. இந்த நிலை மாற, 24 மணி நேர செயல்பாடு அவசியம்.மதுரை விமான நிலையம், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மேம்பாடு பெற வேண்டும். விமான நிலையம் இரவிலும் இயங்கும் போது பயணியர் வருகை, சுற்றுலா, தொழில் போன்றவை அபரிமிதமாக வளரும்.

- ஜெயப்பிரகாசம், தலைவர், தமிழ்நாடு உணவுப் பொருள் வர்த்தகர்கள் சங்கம், மதுரை.விமான நிலையத்திற்கு, 550 கோடி ரூபாய் ஒதுக்கியதாக பா.ஜ., தலைவர் நட்டா அறிவித்தது வரவேற்கத் தக்கது. சர்வதேச அந்தஸ்து பெற முதலில், 24 மணி நேரமும் நிலையம் செயல்பட வேண்டும். மதுரையிலேயே விமானங்களை 'பார்க்' செய்ய இடவசதி உள்ளது. நள்ளிரவில் வரும் விமானங்கள் அதிகாலை பயணியரை ஏற்றிச் செல்ல முடியும்.

- எஸ்.ரத்தினவேலு, தலைவர், தமிழ்நாடு வேளாண் உணவு வர்த்தகர்கள் சங்கம், மதுரை.இந்தியாவில் வாரணாசி, திருப்பதி, கோழிக்கோடு விமான நிலையங்கள் துவங்கிய போதே சர்வதேச அந்தஸ்து பெற்றன. மதுரையில், 1962ல் துவங்கி, 60 ஆண்டுகளைக் கடந்தும் அதை கேட்டுப் பெறுவதில் தாமதம் நீடிக்கிறது. இரவும் செயல்பட்டால் தான், நள்ளிரவு தாண்டி வரும் விமானங்கள் மதுரையில் நிறுத்தப்பட்டு, காலையில் இங்கிருந்தே பயணியரை ஏற்றிச் செல்லும் வகையில் புறப்படும்.


- எஸ்.ஜெகதீசன், தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை.



- நமது நிருபர் -



வாசகர் கருத்து (10)

  • shawn - Madurai,இந்தியா

    .... பாஸ்கரன்

  • முத்துக்குமார் - Madurai,இந்தியா

    மக்களைத் திரட்டி போராட்டத்தை முன்னேடுக்க.... யாரும் இல்லை

  • ravi -

    either open up Indian airports to foreign carriers or shut down airports.

  • Tamilan - Tuticorin,பஹ்ரைன்

    மதுரைக்கு நேரடியாக விமானம் இருந்தால் அனைவரும் சென்னை, திருச்சி & திருவனந்தபுரம் செல்ல தேவையில்லை நாங்கள் நேரடியாக மதுரை வந்துவிடுவோம் இப்போது நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வீடுவந்து சேர 12மணி நேரம் ஆகின்றது. வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் வருவதற்கு 4.30மணி நேர ஆகின்றது, ஆனால் திருவனந்தபுரதில் இருந்து வீடு வந்து சேர 6 மணி நேரம் ஆகின்றது இதில் இரண்டு மணிநேரம் train கிளம்ப காத்திருக்கவேண்டும் மொத்தமாக 12.30மணி நேரம் ஆகின்றது. இந்த அரசியவியாதிகளால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதும் மட்டும் உண்மை அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள் மக்களுக்கு வேண்டியதை. இதற்கு இவர்கள் இல்லாமல் நேரடியாக அரசாங்கமே போதும் எதற்கு இவர்கள்.

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    ஆட்சியாளர்கள் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்