Load Image
dinamalar telegram
Advertisement

காந்தி மியூசியத்தில் களைகட்டும் அகிம்சை சந்தை கண்காட்சி

Tamil News
ADVERTISEMENT



மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் அகிம்சை பொருளாதார கூட்டமைப்பு சார்பில் நடந்து வரும் அகிம்சை சந்தை கண்காட்சியில் அணிகலன் முதல் ஆடை வரை, உணவு முதல் உரங்கள் வரை அனைத்தும் இயற்கை சார்ந்த 'ஆர்கானிக்' பொருட்களாக இடம்பெற்றுள்ளது.



கண்காட்சியில் பாரம்பரிய அரிசி, சிறுதானிய பொருட்கள், மூங்கில், பனை நார், வாழைநார், சணலால் உருவாக்கப்பட்ட கைப்பை, பைல், பேன்சி ஹேண்ட் பேக், தேங்காய் சிரட்டை, இளநீர் மட்டையில் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள், டெரகோட்டாவில் தயாரிக்கப்பட்ட அழகிய சிலைகள், நாட்டு பசுஞ்சாண கை வினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.கைத்தறியில் செய்து இயற்கையாக கிடைக்கும் பூக்கள், வேர்கள், இலைகளின் சாயத்தில் உருவாக்கப்பட்ட ஆண்களுக்கான சட்டை, துண்டு, சேலை, துாய பட்டுநுாலில் நுாற்று கைத்தறியில் நெய்யப்பட்ட பட்டுச்சேலைகள், கருங்கன்னி பருத்தியில் செய்த சேலைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.ஆந்திரா கைவினைப் பொருட்கள், கேரள சுவர் ஓவியங்கள், கர்நாடக கைத்தறி ஆடைகள், சேலம் சிறு தானியங்கள், கன்னியாகுமரி பனை ஓலை பொருட்கள்,



கும்பகோணம் நெசவாளர் பட்டு, மதுரை மூங்கில் பொருட்கள் மக்களை கவர்கின்றன.இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட தலைவலி தைலம், சளி நிவாரண மருந்து, வீடு துடைக்கும் திரவம், மெழுகுவர்த்தி, குளியல் சோப்பு, உணவுப்பொருட்களை வாங்கிச்செல்லாம்.வீட்டில் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு பூச்செடிகள், காய்கறி, பழ விதைகள், செடிகளுக்கான இயற்கை உரங்கள் உள்ளன. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி,



குறுந்தானியங்களில் தயாரான லட்டு, அதிரசம், பணியாரம், இட்லி, தோசை, பிரியாணி, தயிர்சாதம், கூழ் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.கண்காட்சியில் தினமும் கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள், கைவினை பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை அகிம்சை சந்தையை விளக்கும் படமும் திரையிடப்படுகிறது.கண்காட்சி இன்றும், நாளையும் மட்டுமே. நேரம் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. அனுமதி இலவசம்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement