Load Image
dinamalar telegram
Advertisement

பழனிசாமி பவரை பரிசோதிக்கிறார்!

Tamil News
ADVERTISEMENT
மின் கட்டண உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்காக லாரியில் மேடை அமைத்திருந்தனர். வெயில் சுட்டெரித்ததால், தொண்டர்கள் பலரும் லாரிக்கு பின்புறமும், அருகிலுள்ள டீக்கடையிலும், நிழல் பார்த்து ஒதுங்கி நின்றனர்.


இதைப் பார்த்த, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் பொள்ளாச்சி ஜெயராமன், 'பழனிசாமி சொன்னால் எதையும் செய்வோம் என்பவர்கள், வெயிலோ, மழையோ எது வந்தாலும், மேடைக்கு முன்புறம் வந்து நிற்க வேண்டும். டீக்கடையில் நிற்பவர்கள், நிழலுக்கு ஒதுங்குபவர்கள் எல்லாம், பழனிசாமி பேச்சை கேட்காதவர்கள். ஏன் கொஞ்ச நேரம் வெயிலில் நிற்க மாட்டீர்களா' என்றார்.


உடனே, நிழலுக்கு ஒதுங்கியவர்கள், மேடைக்கு முன் சென்று நின்றனர். பார்வையாளர் ஒருவர், 'இவங்க கட்சியில் பங்காளி சண்டை நடக்கற நேரத்துல, பழனிசாமி பவரை, இவரு எப்படி எல்லாம் பரிசோதிக்கிறார் பாருங்க...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

'தெருத்தெருவா பிரசாரம் செய்தீர்களே!'கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி மகன்
திருமணத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று, மணமக்களை
வாழ்த்தினார்.

அப்போது, 'நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதே...?' என, நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'சும்மா எங்க போனாலும் நீட், நீட்டுன்னு
கேட்கிறீர்களே...' என்று, எரிந்து விழுந்தார்.சிறிது நேர அமைதிக்கு பின் சுதாரித்த அவர், 'நீட் தேர்விற்கு விலக்களிக்க, தமிழக அரசு தொடர்ந்து போராடும்' என்ற, வழக்கமான பதிலை

மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து நழுவினார்.

மூத்த நிருபர் ஒருவர், 'தேர்தல் நேரத்தில், நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்னு தெருத் தெருவா பிரசாரம் செய்து, ஆட்சிக்கும் வந்தாச்சு... உங்க வேலை முடிஞ்சதும், இப்ப அது

சம்பந்தமா கேள்வி கேட்டா, ரொம்ப எரிச்சல் வருதோ...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.

'புது ரூல்ஸ் போட்டிருக்காங்களோ?'கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாணவியர் விடுதியை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் புறப்பட்டு சென்ற பின், தி.மு.க., நகர செயலர் தண்டபாணி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சமூக நலத்துறை அதிகாரிகளிடம், 'வெளியூரில் இருந்து வந்த நிர்வாகிகளுக்கு சால்வை போடுவீர்கள்... உள்ளூரில் இருக்கும் எனக்கு போட மாட்டீர்களா...?' என்று கேட்டு மிரட்டியதோடு, 'இந்த முறை மன்னித்து விடுகிறேன்... அடுத்த முறை சும்மா விட மாட்டேன்' எனக்கூறி புறப்பட்டார்.

அதிகாரி ஒருவர், 'அரசு விழாவிற்கு அரசியல்வாதிகளை அழைக்கணும்னோ, அப்படியே அவங்க வந்தாலும், சால்வை, சம்பிரதாயமெல்லாம் செய்யணும்னோ அவசியமே இல்ல... இது கூட தெரியாம இவரு மிரட்டுறாரே...' என, முணுமுணுக்க, மற்றொருவர், 'திராவிட மாடலில், உள்ளூர் தி.மு.க., நிர்வாகிகளுக்கு சால்வை போடணும்னு, புது ரூல்ஸ் போட்டிருக்காங்களோ என்னவோ...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement