Load Image
Advertisement

வீட்டுச் சிறையில் ஜிங்பிங்? உறுதி செய்யப்படாத தகவலால் சீனாவில் பதற்றம்

Tamil News
ADVERTISEMENT
பீஜிங்: சீனாவின் அதிபர் ஷீ ஜிங்பிங் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், ராணுவத்தை கட்டுப்படுத்தும் அவரது அதிகாரம், சக கம்யூனிஸ்ட் தலைவர்களால் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்களால், உலகம் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


@1brநம் அண்டை நாடான சீனாவுக்கு 'இரும்புக் கோட்டை' என்ற மற்றொரு பெயரும் உண்டு. அங்கிருந்து எந்த தகவலும் அவ்வளவு எளிதாக வெளியில் கசிந்து விடாது. கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் சீனாவின் ஆட்சி அதிகாரத்தில் ராணுவத்துக்கு பெரும் பங்கு உள்ளது. சீனாவின் அதிபராக இருப்பவரே, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகவும், ராணுவத்தின் தலைவராகவும் பதவி வகிப்பார். ஜிங்பிங் 2012ல் இருந்து இந்த பதவியில் உள்ளார்.ஏற்கனவே இரண்டு முறை சீன அதிபர் பதவியை வகித்து விட்ட நிலையில், மூன்றாவது முறையாகவும் அதிபராவதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வந்தார்.

ஒத்துழைப்புஇந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாத ஜிங்பிங், சமீபத்தில் மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றார். ஆனால், கூட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளாமல், கடந்த 16ம் தேதி அவசரமாக பீஜிங் திரும்பினர். அப்போது அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ஜோங்னான்ஹை மாளிகையில், வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பீஜிங் நகர் முழுதும் ராணுவத்தின் முற்றுகையில் இருப்பதாகவும், ராணுவ வாகனங்கள் பல கி.மீ., துாரம் வரிசை கட்டி நிற்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல், சீனர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதால், சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உறுதி செய்யப்படாத இந்த தகவல் குறித்து, சீனாவில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியிடப்படவில்லை.


இது குறித்து, சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது: கொரோனா பரவல் துவங்கியதில் இருந்தே, கடந்த இரண்டு ஆண்டு களாக ஜிங்பிங் எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. எந்த ஒரு உலக நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து பேச்சு நடத்தவில்லை.


கடந்த 14ம் தேதி தான், உஸ்பெகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார். இந்த மாநாட்டில் அவர் பங்கேற்றாலும், அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. முக்கியமான உரை எதையும் அவர் நிகழ்த்தவில்லை. மேலும், ரஷ்ய அதிபர் புடின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை தனியாக சந்தித்து பேசவில்லை. அவர் பீஜிங்கில் இருந்து புறப்படுவதற்கு முன், அரசியல் ரீதியான நெருக்கடியில் சிக்கியிருந்தார் என்பதற்கு இந்த நிகழ்வுகள் உதாரணமாக உள்ளன. தற்போது பீஜிங்கில் நடப்பதாக கூறப்படும் பரபரப்பான நிகழ்வுகள் அதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.
Latest Tamil News

கைமாறிய அதிகாரம்சீனாவின் ஆட்சி அதிகாரத்தில், சி.ஜி.பி., எனப்படும் மத்திய பாதுகாப்பு குழு என்ற அமைப்புக்கு பெரும் பங்கு உண்டு. ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு உள்ளவர்களால் இந்த குழு நிர்வகிக்கப்படுகிறது. இந்தக் குழு பொலிட் பீரோ நிலைக்குழு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய குழுவினரின் பாதுகாப்புக்காக செயல்படுவதாக கூறப்பட்டாலும், இந்தக் குழு எடுக்கும் முடிவு தான் சீனாவின் அதிகார மையத்தில் இறுதியானது. ஜிங்பிங்கின் சொதப்பலான பொருளாதார நிர்வாகம், கெடுபிடியான கொரோனா கட்டுப்பாடுகள், இந்தியா, தைவான் உள்ளிட்ட நாடுகளுடனான மோதல் ஆகியவற்றாலும், ஜிங்பிங் மூன்றாவது முறையாக அதிபராக முயற்சிப்பதாலும், இக்குழுவில் உள்ள மற்ற சில உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். இக்குழுவில் ஜிங்பிங்கின் ஆதரவாளர்கள் கோலோச்சுவதையும் அவர்கள் விரும்பவில்லை. முன்னாள் அதிபர் ஹூ ஜிண்டாவோ, முன்னாள் பிரதமர் வென் ஜியாபோ உள்ளிட்டோர், ஜிங்பிங்கிற்கு எதிராக காய் நகர்த்த துவங்கினர்.

தயாரான வியூகம்Latest Tamil News
ஜிங்பிங்கிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வியூகம் கடந்த 15 நாட்களுக்கு முன்பே தயாராகி விட்டது. முன்னாள் அதிபர் ஹூ ஜிண்டாவோ இதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள், கடந்த சில நாட்களாகவே திரைமறைவில் பேச்சு நடத்தி வந்தனர். சி.ஜி.பி.,யில் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்கான கூட்டம், செப்., 8ல் நடந்தது. இதில், ஜிங்பிங்கின் தீவிர விசுவாசி தலைவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சீன ராணுவத்தின் கமாண்டரான லி கியாவோமிங் இதில் பங்கேற்றார். இவர், ஜிங்பிங்கின் சர்வாதிகார போக்கால் ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்தார். இவர்கள் அனைவரும் ஜிங்பிங்கின் அதிகாரத்தை பறிப்பது குறித்து ரகசியமாக முடிவு எடுத்திருந்தனர்.


ஜிங்பிங் உஸ்பெகிஸ்தான் சென்றிருந்தபோது, பொலிட் பீரோ நிலைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சோங் பிங்கை சந்தித்த ஹூ ஜிண்டாவோ, வென் ஜியாபோ ஆகியோர், சி.ஜி.பி.,யின் அதிகாரத்தை ஜிங்பிங்கிடமிருந்து கைப்பற்றும் முடிவை தெரிவித்தனர். மேலும், கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர்களுக்கும் இந்த முடிவு டெலிபோன் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ராணுவத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஜிங்பிங்கிடமிருந்து பொலிட் பீரோ நிலைக்குழு பறித்தது. இதையடுத்து தான், உஸ்பெகிஸ்தானிலிருந்து திரும்பியதும் ஜிங்பிங் அதிரடியாக கைது
செய்யப்பட்டார்.

Latest Tamil News

ராணுவம் ஆலோசனைஇதற்கிடையே, சீனாவின் தேசிய பாதுகாப்பு குழு கூட்டமும் சமீபத்தில் நடந்தது. இதில், ஏற்கனவே ஜிங்பிங்கால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய தலைவரான சென்யாங் காங் பங்கேற்றார்.பொலிட் பீரோ நிலைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சோங் பிங், கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இப்போது, 'நாட்டின் தலைமையில் மாற்றம் தேவைப்படுகிறது' என, அவர் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் ஜிங்பிங், வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ ஆகிய இருவரைத் தவிர, சீன கம்யூனிஸ்ட்டின் மற்ற முக்கிய தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஜிங்பிங்கிற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள், ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் ஒன்று திரண்டு எடுத்த இந்த முடிவு, சீன அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.இவ்வாறு அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Latest Tamil News

அடுத்த அதிபர் யார்? சீன ராணுவத்தின் கமாண்டரான லி கியாவோமிங், 61, அந்த நாட்டின் அடுத்த அதிபராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1976ல் ராணுவத்தில் இணைந்த கியாவோமிங், 2013ல் கமாண்டர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் உள்ளார். சமீபத்தில் நடந்த ஜிங்பிங் அதிருப்தியாளர்களின் கூட்டத்தில் இவர் பங்கேற்றார். இதனால், சீனாவின் அடுத்த அதிபராக இவர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

60 சதவீத விமானங்கள் ரத்து?


அமெரிக்காவில் வசிக்கும் சில சீனர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை அடுத்து, நாடு முழுதும் கடந்த 21ம் தேதி மட்டும், 9,581 விமானங்கள், அதாவது 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக பீஜிங்கில் மட்டும், 600க்கும் அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அண்டை நாடுகளுடன் மோதல்


தைவான், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை ஜிங்பிங் பின்பற்றி வந்ததை, அங்குள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் விரும்பவில்லை. தைவான் ஜலசந்தியில் சீனப் போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை அனுப்பி வைத்து போர் பயிற்சியில் ஈடுபட வைத்ததால், சீனா மீது உலக நாடுகள் அதிருப்தி அடைந்தன. இது, அங்குள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், லடாக் ஆகிய பகுதிகளில் அடிக்கடி சீன ராணுவம் அத்து மீறியது. இதனால், இந்தியாவுடனான சீனாவின் உறவு பாதிக்கப்பட்டது. இதுவும், சீன மக்களிடமும், சீன கம்யூனிஸ்ட் கட்சியினரிடமும் ஜிங்பிங் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.
உண்மையா, பொய்யா?


சீன அதிபர் ஜிங்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது. இந்த புதிய வதந்தி சரிபார்க்கப்பட வேண்டும். ஜிங்பிங் உஸ்பெகிஸ்தானில் இருந்தபோது சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள், கட்சி பொறுப்பு மற்றும் ராணுவ பொறுப்பிலிருந்து அவரை நீக்கியதாக கருதப்படுகிறது. சுப்பிரமணியன் சுவாமி மூத்த தலைவர், பா.ஜ.,

பீஜிங் முற்றுகை?


சீனாவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும், தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான ஜெனிபர் ஜெங், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:சீன தலைநகர் பீஜிங் ராணுவத்தின் முற்றுகையில் உள்ளது. சீனாவின் மற்ற நகரங்களில் இருந்து பீஜிங்கிற்கு ஆயிரக்கணக்கான ராணுவ வாகனங்கள் வருகின்றன. 80 கி.மீ., துாரத்துக்கு ராணுவ வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
மோப்பம் பிடித்த ரஷ்ய உளவுத் துறை


சீனாவில் நடக்கும் அரசியல் குழப்பங்களை ரஷ்ய உளவுத் துறை மோப்பம் பிடித்துள்ளது. இதையடுத்து, ரஷ்யாவைச் சேர்ந்த எரிவாயு நிறுவனமான, 'காஜ்ப்ரோன்' சீனாவுக்கு குழாய் வழியாக செல்லும் எரிவாயு சப்ளையை நிறுத்தி வைத்தது. ஆனாலும், பராமரிப்பு பணி காரணமாக எரிவாயு சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (24)

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  சீனாவில் குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்கா செய்யும் சதியாக இருக்கலாம் ....

 • rsudarsan lic - mumbai,இந்தியா

  What is the difference?

 • Mohan - Thanjavur ,இந்தியா

  அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா 24-செப்-2022 21:52" . இவ்வளவு இவ்வளவு பேராசை இருக்கக் கூடாது ஒங்களுக்கு. பாப்போம் ஆசப்பட்டுட்டீங்க.

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  டீ மாஸ்டரைக் கட்டிப் புடிச்ச ஒருத்தனும் வாழ்ந்ததில்லை. வரிசையா சரிஞ்சு கிட்டே இருக்கானுங்க. வைக்கோ நேஷனல் என்றால் டீ மாஸ்டர் இண்டர் நேஷனல். சசிகலா நெத்தியில் டச்சுக்கே நாலு வருசம் காராக்கிரகம். அடுத்த வாட்டி வரும்போது விடியலை எலும்பு நொறுங்க கட்டிப்படிச்சால் நல்லா இருக்கும்.

 • rsudarsan lic - mumbai,இந்தியா

  Govinda govindha

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement