ADVERTISEMENT
லக்னோ: உ.பி.,யின் சீதாபூரில், ஆசிரியர் திட்டியதால், கோபமடைந்த மாணவர் ஒருவர், அவரை துப்பாக்கியால் 3 முறை சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த மாணவர், சக மாணவருடன் தகராறில் ஈடுபட்டதை பார்த்த ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால், கோபமடைந்த அந்த மாணவர், சாலையில் நடந்து சென்ற ஆசிரியரை நாட்டு துப்பாக்கியால் 3 முறை சுட்டார். அதில், படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினர். மேல் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு ஆசிரியர் அனுப்பி வைக்கப்பட்டார்.
மாணவன் சுடுவதை பார்த்தவர்கள், அவனை பிடிக்க முயன்றனர். ஆசிரியரும் பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், அவரை தாக்கிவிட்டு நழுவி சென்றான். இருப்பினும் மற்றவர்கள் அந்த மாணவனை பிடித்து சராமரி அடி கொடுத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.
வாசகர் கருத்து (6)
சும்மா. தீபாவை துப்பாக்கியை தவறாக சித்தரித்து தேசத்துரோகிகள் விஷம செய்தியை பரப்புகிறார்கள் என்று ஒரு அறிக்கை விட்டுடவேண்டியதுதான். விளக்கம் கொடுக்க பலர் முடியடிப்பது தெரிகிறது.
இப்போ தெரியுதா சிகரெட் பிடிச்சான்னு தண்டித்ததற்கு இடமாற்றம் ஏன் என்று.? இந்த மாதிரி மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களை காப்பாற்றத் தான்.
Now acdays difficult time for teachers. Teachers are 3rd God for us after God and parents.
இதற்கும் திராவிட மாடல் தான் காரணம் என்று முட்டு கொடுத்து சங்கிகள் வருவார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பா.ஜ.க.தமிழ் நாட்டுல வளர்ந்து வருவது விடியல் காரர்களுக்கு பொறுக்க முடியல. சங்கி, மங்கி ன்னு ஏதாவது திட்டி எல்லா செய்திகளிலும் புகுந்து க(ரு)த்துராய்ங்கப்பா வெறுப்பை காட்டுராய்ங்கப்பா