Load Image
dinamalar telegram
Advertisement

பா.ஜ., அலுவலகத்திற்குபோலீஸ் பாதுகாப்பு



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கோயம்புத்துார், காந்திபுரம் சித்தாபுதுார் பகுதியில் உள்ள மாவட்ட பா.ஜ., அலுவலகம் மீதும், ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக் கடை மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டினை நேற்று முன்தினம் இரவு வீசினர்.இதில், பா.ஜ., அலுவலகம் மீது வீசப்பட்ட பெட் ரோல் குண்டு வெடிக்கவில்லை. அங்கிருந்த சி.சி.டி.வி., கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். பா.ஜ., தலைவர் நட்டா தமிழகத்திற்கு வந்துள்ள நிலையில், கோயம்புத்துார் பா.ஜ., அலுவலகம் மீது பெட்ரோல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக, கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., அலுவலகத்திற்கு நேற்று காலை முதல் இரவு வரை சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement