Load Image
dinamalar telegram
Advertisement

போக்குவரத்து விதிமீறல்ரூ.4 லட்சம் அபராதம்

Tamil News
ADVERTISEMENT


கடலுார்-கடலுாரில், போக்குவரத்து விதிகளை மீறிய லாரிகள் மற்றும் ஆட்டோக்களுக்கு 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கடலுார் மாநகரில் அனுமதியின்றியும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், ஆவணங்களை புதுப்பிக்காமலும் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து, கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன், போக்குவரத்து பிரிவு சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் அண்ணா பாலம் சிக்னல் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, இன்சூரன்ஸ் புதுப்பிக்காதது என போக்குவரத்து விதிகளை மீறி இயக்கிய 16 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இரண்டு நாட்களுக்கு முன்,கூடுதல் பாரம் ஏற்றிச் சென்றதாக 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement