ADVERTISEMENT
காட்டுமன்னார்கோவில்4காட்டுமன்னார்கோவில் அருகே, குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், தனியார் வாகனம் மூலமாக குடிநீர் வழங்குவதற்கு, பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமுர்த்தி ஏற்பாடு செய்தார்.காட்டுமன்னார்கோவில் அருகே, ராஜேந்திரசோழன் பகுதியில் உள்ள தாமரைக் குளம் தெருவில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள குடிநீர் குழாயில் திடீரென நேற்று அடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் தடைப்பட்டது.தகவலறிந்த, காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி, தனியார் வாகனம் மூலமாக உடனடியாக குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார். செயல் அலுவலர் சதீஷ், துப்புரவு ஆய்வாளர் துரைராஜ் உடனிருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!