Load Image
dinamalar telegram
Advertisement

உண்டு உறைவிடப் பள்ளிகள் நடத்தவிண்ணப்பங்கள் வரவேற்பு



கடலுார்,-கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளை நடத்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து, கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், நல்லுார் ஒன்றியம், பெரிய நெசலுார் மற்றும் பண்ருட்டி ஒன்றியம் காடாம்புலியூரில் கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகிறது.இப்பள்ளிகளை பொறுப்பேற்று நடத்த, பதிவு பெற்று தகுதிவாய்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பங்கள் வரும் 26ம் தேதி முதல், 30ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்க அக்., 3ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், மஞ்சக்குப்பம், கடலுார் என்ற முகவரியில் பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement