Load Image
dinamalar telegram
Advertisement

குறிஞ்சிப்பாடி பஸ் நிலைய கட்டுமான பணிகண்காணிப்பு அதிகாரி மிஸ்ரா ஆய்வு

Tamil News
ADVERTISEMENT


வடலுார்-குறிஞ்சிப்பாடியில், புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அன்சுல் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குறிஞ்சிப்பாடியில், ரூ.4.82 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலனை கருத்தில் கொண்டு, கட்டுமான பணிகளை வேகப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில், குறிஞ்சிப்பாடி பஸ் நிலைய கட்டுமான பணிகளை, கடலுார் மாவட்ட அரசு திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆடூர் அகரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வகுப்பறையில் எண்ணும் எழுத்தும் திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டார்.இன்றைய தொகுத்தறி மதிப்பீட்டு முறையில் மொபைல் ஆப் மூலம் மதிப்பீடு நடந்து கொண்டிருந்ததையும், அதில் மாணவர்கள் பங்கு பெற்றதையும் நேரடியாக பார்வையிட்டு, மாணவ, மாணவியரிடம் விபரங்களை கேட்டறிந்தார்

.மாணவர்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆசிரியர்களிடம் சுட்டிக் காட்டினார். தொடர்ந்து, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் பூவாணிக்குப்பம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், அய்யனார் குளத்தை ரூ.9.73 லட்சம் மதிப்பீட்டில் துார்வாரி கரைகளை பலப்படுத்தும் பணியையும் அன்சுல் மிஸ்ரா பார்வையிட்டார்.கலெக்டர் பாலசுப்ரமணியம், கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன், பி.டி.ஓ.,க்கள் சிவஞானசுந்தரம், சதீஷ்குமார் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement