Load Image
dinamalar telegram
Advertisement

ஒன்றிய அலுவலகம் முற்றுகை; கம்மாபுரத்தில் பரபரப்பு

Tamil News
ADVERTISEMENT


விருத்தாசலம்-கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை, கிராம மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினரும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், பரபரப்பு நிலவியது. கம்மாபுரம் அடுத்த வடக்கு சேப்ளாநத்தம் கிராமத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிகளை சரியாக வழங்க வேண்டும், புதிதாக குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர், கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்டக் குழு உறுப்பினர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கனகராஜ், ஜெயமணி, அன்புசெல்வி, சின்னதம்பி, தமிழ்மணி, வீரா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து, பி.டி.ஓ., குமரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement