Load Image
dinamalar telegram
Advertisement

விருதுநகரில் மீண்டும் தலை துாக்கும் பிளக்ஸ் பேனர்கள் கலாசாரம்

Tamil News
ADVERTISEMENT
விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளால் தலைதுாக்கி உள்ள இந்த கலாசாரத்தை நீதிமன்ற உத்தரவு படி தடுத்து நிறுத்த வேண்டும்.

சென்னையில் பிளக்ஸ் சரிந்ததால் டூவீலரில் சென்ற இளம்பெண் உயிரிழந்தார். இந்நிலையில் உயர்நீதிமன்றம் பிளக்ஸ் கலாசாரத்திற்கு தடை விதித்து கடும் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. பிளக்ஸ் வைப்பதற்கு போலீசாரிடம் அனுமதி பெறவும், நடைபாதைகள், பள்ளி, கல்லுாரிகள் செல்லும் வழிகளில் பிளக்ஸ் வைக்க கூடாது எனவும் கூறப்பட்டது.இந்நிலையில் இந்த விதி ஓராண்டுக்கு மேல் அரசால் நல்ல முறையில் பின்பற்றப்பட்டது.


ஆனால் சமீப காலமாக இது காற்றில் விடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆளும் அரசியல் கட்சியினரே தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பிளக்ஸ் பேனரை சகஜமாக பயன்படுத்தி வருகின்றனர். அரசியல் பிரமுகர்களின் திருமண விழாக்களிலும் ரோட்டோரங்களில் பிளக்ஸ் வைப்பது வாடிக்கையாக உள்ளது.நீதிமன்ற உத்தரவால் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட், மெயின் பஜார், ரோட்டோரங்களில் வைக்கப்பட்டு நீண்ட காலமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

நீதிமன்ற உத்தரவுக்கு பின் அகற்றப்பட்டாலும் மீண்டும் முளைக்கின்றன. அகற்றுவதும், மீண்டும் பேனர் வைப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் கடைகளின் மேற்பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்படுகிறது ஆக. 13ல் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. இவை மீண்டும் அதே இடங்களில் நேற்று வைக்கப்பட்டன.


இந்நிலையில் அரசியல் கட்சிகளின் பிளக்ஸ் பேனர் கலாசாரத்தால் வணிக நிறுவனங்களும் மீண்டும் பிளக்ஸ் வைக்க துவங்கி உள்ளன. பழைய பஸ் ஸ்டாண்டில் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி அளித்திருந்தாலும் காலக்கெடு தாண்டி வைக்காமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement