Load Image
dinamalar telegram
Advertisement

கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி

Tamil News
ADVERTISEMENT


கடலுார்-மதுரை எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில், கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி வெளி அரங்கிலும், ஆழ்கடல் வண்ண மீன்கள் கண்காட்சி முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கத்திலும் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.திறப்பு விழாவிற்கு கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கடலூர் மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, பொருட்காட்சி உரிமையாளர்கள் சிட்டிபாபு, பாண்டியராஜன், சித்தார்த்தன், பாலாஜி, மாமன்ற உறுப்பினர்கள் மண்டல குழு தலைவர் பிரசன்னா, அருள்பாபு, சுபாஷினி ராஜா, கிரேசி, சசிகலா ஜெயசீலன், சங்கீதா குமரன், இளைஞரணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், மாநகர துணை செயலாளர் அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியின் உரிமையாளர்கள் சிட்டிபாபு, பாண்டியராஜன், சித்தார்த்தன், பாலாஜி அளித்த பேட்டி:கண்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருள்கள் உள்ளிட்ட 20 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான மதுரை ஜிகர்தண்டா, ஸ்பிரிங் பொட்டேட்டோ, டில்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, வட இந்திய உணவு வகைகள், ஐஸ் கிரீம் போன்ற 20 வகையான சிற்றுண்டி ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை, விளையாடி மகிழும் வகையில் கொலம்பஸ், ஜெயண்ட் வீல், சுனாமி, 3 இன் 1, ஹெலிகாப்டர், பட்டர்பிளை, கேட்டர் பிளை போன்ற 15 வகையான ராட்டின விளையாட்டுகள், வாட்டர் போட்டிங், டிராகன் ட்ரெய்ன், சிண்டிகேட், பிரேக் டான்ஸ் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. பொருட்காட்சி தினமும் மாலை 4:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை இயங்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement