Load Image
dinamalar telegram
Advertisement

இலவச பொது மருத்துவ முகாம் ராசிபுரத்தில் இன்று துவக்கம்

ராசிபுரம் :ராசிபுரத்தில் இலவச பொது மருத்துவ முகாம் இன்று துவங்கி, நாளை வரை, இரு நாட்கள் நடக்கிது.
சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை சார்பில், இலவச பொது மருத்துவ முகாம், ராசிபுரத்தில் உள்ள பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் இன்று துவங்கி, நாளை வரை, இரு நாட்கள் நடக்கிறது. மருத்துவமனை நிறுவனர் ராமசாமி உடையார் நினைவாக, இந்த மருத்துவமுகாம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. முகாமில், பொது மருத்துவம், நுரையீரல் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், எலும்பு, மூட்டு பிரச்னை, இருதய பரிசோதனை, நரம்பியல், சிறுநீரகம், தோல், காது, மூக்கு, தொண்டை, கண், பல், உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் நவீன பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படும். இ.சி.ஜி., எக்கோ போன்ற இருதய நோய் பரிசோதனைகளும் முகாமில் செய்யப்பட உள்ளது.

இலவச மருத்துவ முகாமை, ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி வேந்தர் வெங்கடாசலம் துவக்கி வைக்கிறார். மேலும், மருத்துவக் கல்லுாரி டீன் பாலாஜிசிங், இருதய பிரிவு டாக்டர் முரளிதரன், கண் மருத்துவ துறைத்தலைவர் ராதா அண்ணாமலை உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவர்கள் முகாமில் சிகிச்சை அளிக்க உள்ளனர். இதில் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். ஆபரேஷன் தேவைப்படுவோர் சென்னை அழைத்து செல்லப்படுவர். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் முன் பதிவு செய்து பயன் பெறலாம்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement