Load Image
dinamalar telegram
Advertisement

தார்ப்பாய் பயன்படுத்தாதடிப்பர் லாரிகள் பறிமுதல்



புவனகிரி-தார்ப்பாய் கொண்டு மூடாமல் மணல் ஏற்றி வந்த 5 டிப்பர் லாரிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலை விரிவாக்கப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, சிதம்பரம் பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக, குறிஞ்சிப்பாடி பரவனாற்றில் இருந்து 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் தினசரி மணல் ஏற்றிக் கொண்டு சாத்தப்பாடி, புவனகிரி வழியாக அதிவேகத்தில் செல்கிறது.வாகனங்களில் ஏற்றி வரும் மணலை தார்பாயினால் மூட வேண்டும் என்பது ஒப்பந்த விதியாகும். ஆனால், அதிகளவில் மணல் எடுத்து வர வேண்டும் என்பதற்காக சில ஒப்பந்ததாரர்கள் விதிகளை பின்பற்றாததால், சாலை எங்கும் மணல் சிதறுகிறது. இதனால், விபத்துகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.இதுகுறித்து, நடவடிக்கை எடுக்குமாறு, தாசில்தார் ரம்யா, வருவாய்த் துறையினருக்கும், போலீசாருக்கும் உத்தரவிட்டார். புவனகிரி வருவாய் ஆய்வாளர் கவிதா தலைமையில் அலுவலர்கள், புவனகிரி ஊராட்சி ஒன்றிம் அருகில் சோதனை மேற்கொண்டனர். விதிமுறைகளை பின்பற்றாமல் மணல் ஏற்றி வந்த 5 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement