Load Image
dinamalar telegram
Advertisement

கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் நாளை மஹாளய அமாவாசை சிறப்பு பூஜை



புதுச்சேரி-கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில், மஹாளய அமாவாசையை முன்னிட்டு, நாளை 25ம் தேதி சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோமாதா ஆலய, ராஜா சாஸ்திரி கூறியதாவது:மஹாளயபட்சம் ஆரம்பத்தில் இருந்து, மஹாளய அமாவாசை முடிய உள்ள 15 நாட்கள் மஹாளயபட்ச புண்ணிய காலமாகும். இந்த நாட்களில், நம் மீது அன்பு, பாசம் காட்டி வளர்த்து, நமக்காக பல சுகங்களை தியாகம் செய்த முன்னோர்களை வணங்க வேண்டும்.பித்ரு தேவதைகள் சூரிய பகவான், தர்மராஜன் அனுமதி பெற்று முன்னோர்கள் பூமியை வந்தடைந்து, மஹாளயபட்ச நாட்களாக 15 நாட்களும் நம்முடன் தங்கி, நாம் அளிக்கும் உபசாரங்கள், பூஜைகளை ஏற்று நம்மை ஆசிர்வதிக்கின்றனர்.இந்த நாட்களில், தங்களது வீட்டில் பூஜை செய்வதைவிட, பசுக்கள் நிறைந்த இடத்தில் பூஜை செய்தால் அதிக பலன்களை பெறலாம்.அந்த வகையில், மஹாளயபட்ச காலம் துவங்கிய நாள் முதல் கருவடிக்குப்பம் ஓம் சக்தி நகரில் உள்ள கோமாதா ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.மஹாளயபட்சம் நிறைவு பெறும் அமாவாசை தினமான நாளை 25ம் தேதி காலை முதல், கோமாதா கோவிலில் கோ பூஜை, முன்னோர்கள் வழிபாடு, தர்ப்பணம், சிறப்பு பூஜை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் விபரங்களுக்கு, ராஜா சாஸ்திரிகளை 98423 29770, 98423 27791 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement