Load Image
dinamalar telegram
Advertisement

இலவச மென்பொருள் பயிற்சி: அமைச்சர் துவக்கி வைப்பு

Tamil News
ADVERTISEMENT


காரைக்கால்--காரைக்காலில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான இலவச மென்பொருள் பயிற்சி வகுப்பை அமைச்சர் சந்திரபிரியங்கா துவக்கிவைத்தார்.காரைக்காலில் மத்திய அரசின் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு இயக்குனரகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு இலவச மென்பொருள் பயிற்சி வகுப்பு துவக்க அரசு அண்ணா கல்லுாரியில் நடந்தது.விழாவிற்கு கல்லுாரி முதல்வர் வியாசராயர் முன்னிலை வகித்தார். அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி, பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கினார்.இந்த ஓராண்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.நிகழ்ச்சியில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சண்முகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக் கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை வேலைவாய்ப்பு அலுவலர் கோட்டூர் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement