Load Image
dinamalar telegram
Advertisement

துப்புரவு பணி குறித்து விழிப்புணர்வு பேரணி

Tamil News
ADVERTISEMENT


திருக்கனுார்-திருக்கனுார் தனியார் பள்ளியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் துப்புரவு பணி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியை ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கி, கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், அலுவலக உதவியாளர் அன்பழகன், வில்லியனுார் பி.டி.ஓ., இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி, விரிவாக்க அதிகாரிகள் ரெங்கநாதன், ராஜி, கிராம சேவகர் வீரமுத்து, மகளிர் குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.தனியார் பள்ளியில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணி திருக்கனுார் காந்திநகர், பிள்ளையார் கோவில் வீதி, வணிகர் வீதி வழியாக திருக்கனுார் பஜார் வீதிக்கு சென்று மீண்டும் அதே வழியாக பள்ளிக்குச் சென்று முடிவடைந்தது.பேரணியில் பொதுமக்கள் குப்பைகளை சாலையில் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்டவை குறித்து மாணவர்கள் கோஷமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement