Load Image
dinamalar telegram
Advertisement

என்.ஐ.ஏ.,விடம் சிக்கிய மூவர் சிறையில் அடைப்பு



காரைக்கால்-காரைக்காலில் என்.ஐ.ஏ., சோதனையில் சிக்கிய எஸ்.டி.பி.ஐ., மாநில துணை தலைவர் உள்ளிட்ட மூவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் காரைக்கால் தோமாஸ் அருள் வீதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ., மாநில துணை தலைவர் முகமது பிலால்,38; காமராஜர் சாலையை சேர்ந்த முகமது ஹசன் குத்துாஸ்,35; திருப்பட்டினத்தில் பக்ரூதீன்,48; ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.பின்னர் மூவரையும் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மூவரையும் காரைக்கால் நகர போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது, காரைக்கால் நகர போலீசார், ரகசிய கூட்டம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, மூவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மூவரும் புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement