Load Image
dinamalar telegram
Advertisement

புதுச்சேரி பல்கலைக்கு புதிய துணைவேந்தர்; பா.ம.க., மாநில அமைப்பாளர் கோரிக்கை



புதுச்சேரி-புதுச்சேரி பல்கலையில், உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் அளிக்க வேண்டும் என பா.ம.க., வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்த பா.ம.க., மாநில அமைப்பாளர் கணபதி விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி பல்கலையின் 7 வது துணைவேந்தராக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்மித் சிங் கடந்த 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் வரும் நவம்பர் மாதத்தோடு முடிகிறது.இந்நிலையில் மத்திய அரசு, புதிய துணை வேந்தர் நியமிக்க குழு அமைக்க பல்கலையில் இருந்து இரு நபர்கள் கொண்ட கமிட்டியை பரிந்துரை செய்திட பல்கலைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.எனவே காலம் தாழ்த்தாமல் பல்கலை, உடனடியாக துணைவேந்தரை நியமித்து அதனுடைய கல்வித் தரத்தை உயர்த்துவது மிக அவசியமாகும். இப்பல்கலைக்கு இதுவரை தலித் சமுதாயத்தைச் சேர்ந்த எவரும் துணை வேந்தராக நியமிக்கவில்லை. எனவே, பல்கலை துணைவேந்தர் பதவியை தமிழகத்தை சேர்ந்த குறிப்பாக தலித் கல்வியாளர்கள் கொண்டு நிரப்ப வேண்டும். மேலும், பல்கலையில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் வழங்கிட வேண்டும்.தவறினால், பா.ம.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement