Load Image
dinamalar telegram
Advertisement

வி.எச்.பி., ஆர்ப்பாட்டம்

ஈரோடு : தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ஈரோடு, கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அஸ்வத் தலைமை வகித்தார். கோட்ட தலைவர் கஸ்துாரி ரங்கன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுசீந்தர் வரவேற்றார். காவிரி ஆற்றங்கரை சோழீஸ்வரர் கோவிலில் ஆகம விதி நடைமுறைப்படி கும்பாபிஷேக பூஜை நடத்த வேண்டும்.

தேதியை விரைவில் அறிவிக்க வேண்டும். அதற்கு முன் ஆகம விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்ட கட்டுமானம், பிரதிஷ்டை, வழிபாட்டு ஏற்பாடுகளை சரி செய்ய வேண்டும். கோவில் வழிபாடு, கும்பாபிஷேகத்துக்காக பக்தர்கள், மக்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட பணத்தில் எந்தெந்த பணி நடந்தது என்ற விபரம், கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். தவறுக்கு அறநிலையத்துறை உடந்தையாக செயல்படக்கூடாது, என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். நிர்வாகிகள் ஆறுமுகம், சபரிநாதன், விஜயகுமார், அய்யர் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement