Load Image
dinamalar telegram
Advertisement

ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடுமத்திய அமைச்சருக்கு பா.ஜ., கடிதம்



புதுச்சேரி-ஜிப்மரில் நிலவி வரும் மருந்து தட்டுப்பாட்டை போக்க வேண்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் கடிதம் எழுதி உள்ளார்.அவரது கடிதம்:ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தை சார்ந்த 10 மாவட்டங்களுக்கும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. தற்பொழுது ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரிவர மருந்து வழங்கவில்லை. எனவே ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடின்றி மருந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இதுதொடர்பாக அமைச்சரை போனில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார். அதற்கு மத்திய அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement