மது பாட்டில் விற்றபெண் கைது
வானுார்,-பழக்கடையில் புதுச்சேரி மது பாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கிளியனுார் அடுத்த மொளசூரில் சாராயம் விற்கப்படுவதாக கிளியனுார் போலீசாருக்கு புகார் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் போலீசார் மொளசூர் அய்யனார் கோவில் பஸ் நிறுத்தத்தில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மனைவி சத்தியா, 45; என்பவரது பலாப்பழக் கடையில், புதுச்சேரி மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.அதன் பேரில் சத்தியாவை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!