Load Image
dinamalar telegram
Advertisement

மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் மையம்

ஈரோடு : ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் அமைந்த, சைல்டு லைன் மையத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், ஆதரவின்றி சுற்றித்திரியும் சிறுவர், சிறுமியரை கண்காணித்து மீட்கும் வகையில், 2019ல் பிளாட்பார்ம் எண்-1ல் சைல்டு லைன் மையம் அமைக்கப்பட்டது. மையத்தில் ஒருவர் மட்டுமே அமரும் வகையில் சிறிய அறை உள்ளது. அதுவும் மழை காலத்தில் மையத்துக்குள் நீர்
ஒழுகுகிறது.


போதிய இடவசதி இல்லாததால் மீட்கப்படும் சிறுவர், சிறுமியரிடம் விசாரணை, கவுன்சிலிங் அளிப்பது சவாலான விஷயமாக உள்ளது. மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் உள்ளதால், மக்களுக்கும் அதிகம் தெரிவதில்லை என்றும், சைல்டு லைன் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மக்கள் நடமாட்டம் நிறைந்த பிளாட்பார்ம் பகுதிக்கு மையத்தை இடம்மாற்றி, போதிய இடவசதி அளிக்க வேண்டும்.


மாதந்தோறும், 25 முதல் 30 சிறுவர், சிறுமியரை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் மீட்கிறோம். பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் போதிய இடவசதியுடன் அமைத்து கொடுத்தால் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அனுமதிக்காதது ஏன்?
சைல்டு லைன் அமைப்பினர் இப்பிரச்னை குறித்து, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு, கடந்த 21ம் தேதி ஆய்வுக்கு வந்த தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் மனு கொடுக்க முயற்சித்தனர். ஆனால் ஈரோடு, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள், மனு கொடுக்க அனுமதிக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement