Load Image
dinamalar telegram
Advertisement

கீழ்பவானி வாய்க்காலில் ஆபத்தான குளியல் உள்ளூர் சிறுவர்-போதை பயணிகளால் அச்சம்

கீழ்பவானி வாய்க்காலில் சிறுவர்கள், சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர்.
பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, 2,300 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள், பவானிசாகர் அணை பூங்காவுக்கு வருகின்றனர். தண்ணீரை கண்டவுடன் ஆர்வ மிகுதியால், ஆபத்தை உணராமல், கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி குளிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில், வாய்க்காலில் குளித்த பலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில், மீண்டும் உயிர்பலி ஏற்படுமோ என, அப்பகுதி விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து வாய்க்கால் கரையோர விவசாயிகள் கூறியதாவது:

கீழ்பவானி வாய்க்காலில் இறங்க வேண்டாமென நாங்கள் எச்சரித்தாலும், வெவ்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வரும் சிறுவர்களும், இளைஞர்களும் கேட்காமல் குளிக்கின்றனர். குடிபோதையிலும் சிலர் இறங்கி குளிப்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது. உள்ளூர் சிறுவர்களும் நீச்சல் தெரியாத நிலையில் குளியல் போடுகின்றனர். இவர்களை பெற்றோர் எச்சரிக்க வேண்டும். ஆழமான பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement