Load Image
dinamalar telegram
Advertisement

ஜன்னல் கம்பியை வளைத்து தப்பிய கைதிக்கு சிறை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஜார் போலீஸ் ஸ்டேஷனில்இருந்து கம்பியை வளைத்து தப்பியோடிய விசாரணை கைதிஅஸ்ரப்அலி 35 மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ராமநாதபுரம் நகர் வெற்றிலைக்கார தெருவை சேர்ந்தவர் அஸ்ரப்அலி 35. சக்கரைக்கோட்டை நேரு நகரில் வசிக்கிறார். இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. கேணிக்கரை போலீசார் செப்.20ல் அஸ்ரப்அலியை பிடித்து விசாரித்தனர்.விசாரணைக்காக ராமநாதபுரம் பஜார் போலீசாரிடம் அஸ்ரப் அலி ஒப்படைக்கப்பட்டார்.செப். 21 அன்று காலை போலீஸ் ஸ்டேஷன் கழிப்பறைக்கு சென்ற அஸ்ரப் அலி ஜன்னல் கம்பியை வளைத்து தப்பிச்சென்றார்.

விசாரணைக்காக அழைத்து வந்த நிலையில்போலீஸ் ஸ்டேஷனில்இருந்து தப்பித்துச் சென்றதால் போலீசாருக்கு நெருக்கடி ஏற்பட்டது.இந்நிலையில் மண்டபம் பகுதியில் பதுங்கியிருந்த அஸ்ரப் அலியை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement