Load Image
dinamalar telegram
Advertisement

மாவட்ட தி.மு.க.,செயற்குழு கூட்டம்

Tamil News
ADVERTISEMENT


செஞ்சி-செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட அவைத்தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் ரவிக்குமார், மலர் மன்னன், வசந்தா, பொருளாளர் ரவி முன்னிலை வகித்தனர். செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் வரவேற்றார்.அமைச்சர் மஸ்தான் சிறப்புரையாற்றினார்.விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இரண்டாவது முறையாக அமைச்சர் மஸ்தான் பணியாற்ற வேண்டும். அரசின் திட்டங்களை கிராம மக்களிடம் கொண்டு சேர்க்க கட்சியினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, செந்தமிழ்ச்செல்வன், சேதுநாதன், சீதாபதி சொக்கலிங்கம், தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா, மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் சேகர், ஒன்றிய சேர்மன்கள் கண்மணி நெடுஞ்செழியன், அமுதா ரவிக்குமார், யோகேஸ்வரி மணிமாறன், தயாளன், சொக்கலிங்கம், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, செஞ்சி நகர செயலாளர் காஜா நஜீர் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement