Load Image
dinamalar telegram
Advertisement

வட்டார கல்வி அலுவலகத்தில் ரகளை தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு



உளுந்துார்பேட்டை,-திருநாவலுார் வட்டார கல்வி அலுவலகத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த தேவியானந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சேகர், 58; மேப்புலியூர் பள்ளி தலைமை ஆசிரியர். இவர் பணிக்கு சரியாக வரவில்லை என, சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. இதனால் கடந்த ஜுலை 12ம் தேதி திருநாவலுார் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று சேகர் தகராறில் ஈடுபட்டார்.இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து சேகரை கைது செய்தனர். இதையடுத்து சேகர், சஸ் பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணியளவில் திருநாவலுார் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்ற சேகர் அங்குள்ள பணியாளர்களை ஆபாசமாக திட்டி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்தார். அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், பிரிண்டரை உடைத்து ரகளையில் ஈடுபட்டார்.வட்டார கல்வி அலுவலர் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில், சேகர் மீது திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement