Load Image
dinamalar telegram
Advertisement

12 பைக் திருடிய பலே ஆசாமி கைது

Tamil News
ADVERTISEMENT


விழுப்புரம்-விழுப்புரத்தில் 12 பைக் திருடிய பலே வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் ஜானகிபுரம் டாஸ்மாக் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி பைக்குடன் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர், கடலுார் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகையைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் அய்யனார் என்கிற அப்பு, 28; என்பதும், அவர் மீது பண்ருட்டி, நெல்லிக்குப்பம் காவல் நிலையங்களில் 12க்கும் மேற் பட்ட வாகன திருட்டு வழக்கு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிந்தது.மேலும், இவர் விழுப்புரத்தில் பல இடங்களில் பைக்குகள் திருடியதும் தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து, அய்யனாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement