Load Image
dinamalar telegram
Advertisement

காங்கிரஸ் பாரத் ஜோடோ யாத்திரைசோனியா, பிரியங்கா வருகை உறுதி



பெங்களூரு-கர்நாடகாவில் நடக்கும் 'பாரத் ஜோடோ' யாத்திரையில் தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, மூத்த தலைவர் பிரியங்கா ஆகியோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

காங்கிரசின் 'பாரத் ஜோடோ' யாத்திரை தொடர்பாக, அக்கட்சி தேசிய பொது செயலர் வேணுகோபால் தலைமையில், கர்நாடக காங்., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுடன் பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு பின், வேணுகோபால் கூறியதாவது:காங்கிரஸ் எம்.பி., ராகுல், ஏழை மக்களின் பிரச்னைகள் குறித்து யோசிக்கிறார். வேலை வாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சமூக பிரச்னைகள் குறித்து குரல் எழுப்பி வருகிறார்.பொருளாதார ரீதியில் சமம் மற்றும் அரசியல் விரோத செயல்களை கண்டித்து 'பாரத் ஜோடோ' யாத்திரை நடத்துகிறார். இந்த யாத்திரை இந்திய அரசியல் வரலாற்றில் பெரிய திருப்பு முனையாக அமையும்.எதிர்பார்ப்பை மீறி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். ராகுலுடன், குடும்பம், குடும்பமாக வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட்டில் வரும் 30ம் தேதி யாத்திரை நுழைகிறது. தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, மூத்த தலைவர் பிரியங்காவும் கர்நாடகாவில் நடக்கும் யாத்திரையில் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement