Load Image
dinamalar telegram
Advertisement

தொழிற்பகுதிக்காக 50,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டம்சட்ட மேலவையில் அமைச்சர் முருகேஷ் நிரானி தகவல்

Tamil News
ADVERTISEMENT


பெங்களூரு-''கர்நாடகா மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.


பெங்களூரில் 20 ஆயிரம் ஏக்கர், மற்ற மாவட்டங்களில், 30 ஆயிரம் ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்படும்,'' என பெரிய, நடுத்தர தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி, சட்ட மேலவையில் தெரிவித்தார்.கர்நாடகா சட்ட மேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:காங்., -- சலீம் அகமது: கர்நாடக தொழிற்பகுதி வளர்ச்சி ஆணையம் சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனை அல்லது காலியிடத்தில், எவ்வளவு காலத்துக்குள், தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஒருவேளை தொழிற்சாலை அமைக்காவிட்டால், என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அமைச்சர் முருகேஷ் நிரானி: தொழிற்துறை சார்பில், 1,669 தொழிற்பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 1.60 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 52 ஆயிரத்து 8 ஏக்கர் நிலம் மேம்படுத்தப்பட்டது. மற்ற நிலமும் மேம்படுத்தப்படும்.மாநிலத்தில், தொழிற்சாலை அமைக்க, கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. பெங்களூரில் 20 ஆயிரம் ஏக்கர், மற்ற மாவட்டங்களில், 30 ஆயிரம் ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்படும்.திட்டத்தின் மதிப்பீட்டு தொகை அடிப்படையில், தொழிற்சாலை துவங்க கால அவகாசம் நிர்ணயிக்கப்படுகிறது. உருக்கு தொழிற்சாலைகள் துவங்க, ஐந்து ஆண்டுகளாவது தேவைப்படும். அதிகபட்சம் 10 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படும். அதற்குள் தொழிற்சாலை துவங்காவிட்டால், நோட்டீஸ் அளித்து நிலம் திரும்ப பெறப்படும்.இதுவரை 117 தொழிலதிபர்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சிலர் நீதிமன்றத்தை நாடி, தடையுத்தரவு பெற்றுள்ளனர். இனி தடையுத்தரவை தளர்த்த மனு தாக்கல் செய்து, நிலத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும்.மாநிலத்தில் நவம்பர் முதல் வாரம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவுள்ளன. வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில், கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. நாட்டின் முதலீட்டில், 38 சதவீதம் முதலீட்டை நாம் வைத்துள்ளோம்.சலீம் அகமது: தொழிற்துறையில், ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. சிறப்பு அதிகாரி ரகுநாத் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஊழலை பற்றி நேர்மையாக பதிலளியுங்கள்.அமைச்சர் முருகேஷ் நிரானி: அதிகாரியின் தவறு, எங்கள் கவனத்துக்கு வந்த பின், நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த அதிகாரியிடம், விசாரணை நடக்கிறது. அறிக்கை வந்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement