Load Image
dinamalar telegram
Advertisement

முஸ்லிம் இளைஞர்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

Tamil News
ADVERTISEMENT
ஷிவமொகா-''தேசபக்தி கொண்ட முஸ்லிம்கள், தங்களின் பிள்ளைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் திசை மாறி, பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்து, சிறைக்கு செல்ல நேரிடும்,'' என முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா எச்சரித்தார்.

ஷிவமொகாவில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், நேற்று அவர் கூறியதாவது:ஷிவமொகா போலீசார், சிறப்பான பணியை செய்துள்ளனர். பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்பது, அதிர்ச்சியான விஷயமாகும்.பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., போன்றவை தேசதுரோக அமைப்புகளாகும். முஸ்லிம் இளைஞர்களை, 'இஸ்லாமிக் ஸ்டேட்' பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் முயற்சி நிரந்தரமாக நடக்கிறது. இவ்விஷயத்தில் முஸ்லிம் சமுதாய மூத்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேசதுரோகிகளுக்கு, முஸ்லிம் தலைவர்கள் பாடம் புகட்ட வேண்டும்.தேசபக்தி கொண்ட முஸ்லிம்கள், தங்களின் பிள்ளைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் திசை மாறி, பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்து, சிறைக்கு செல்ல நேரிடும்.வேலையில்லாத காரணத்தால், இளைஞர்கள் குற்றங்களில் ஈடுபடுவதாக, காங்., தலைவர் நல்பாட் கூறியுள்ளார். இவர் சிறைக்கு சென்று வந்தவர். இவரை கட்சியில் வைத்திருப்பது குறித்து, காங்கிரஸ் மீண்டும் ஆலோசிப்பது நல்லது.மாநில காங்., தலைவர் சிவகுமார், 'சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியலை நானே தயாரிப்பேன். சித்தராமையாவுக்கும் காண்பிக்க மாட்டேன். நேரடியாக சோனியாவுக்கு அனுப்புவேன்' என கூறியுள்ளார். இவர் சர்வாதிகாரி போன்று நடந்து கொள்கிறார். இதை காங்கிரசின் மற்ற தலைவர்கள் எதிர்க்கின்றனர். சர்வாதிகாரி தோரணை சரியில்லை என, தேஷ்பாண்டே, தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளனர்.காங்கிரஸ் பிரிவினைக்கு, சித்தராமோற்சவம் காரணமானது. இந்த கட்சியினர் இவ்வளவு கீழ்த்தரமான அரசியலில் இறங்குவர் என, நினைக்கவில்லை. ஒரு முதல்வரை பற்றி, 'பே சிஎம்' என விமர்சிப்பது சரியல்ல. அரசியல் செய்ய காங்கிரசார் தகுதியானவர்கள் அல்ல.'பே சிஎம்' போஸ்டர் ஒட்டியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி காங்., தலைவர்கள் கூறியிருக்க வேண்டும். ஆனால் சிவகுமார், சித்தராமையா போன்றவர்களே போஸ்டர் அளிக்கின்றனர். முதல்வர் பதவியை காங்கிரசார் அவமதித்துஉள்ளனர்.ஒப்பந்ததாரர் சங்க தலைவர், காங்கிரசின் ஜால்ரா என்பது அனைவருக்கும் தெரியும். இவரது குற்றச்சாட்டு உறுதியாகவில்லை. காங்கிரசார் குடுகுடுப்பை ஆட்டத்தை நிறுத்த வேண்டும். காலி டப்பாவை தட்டி சத்தம் எழுப்புகின்றனர்.ஒப்பந்ததாரர் சங்கத்தலைவர் கெம்பண்ணா, அவரது பாஸ் சிவகுமார், சித்தராமையா ஆவணங்களை வெளியிடட்டும். அதை விட்டு விட்டு, 40 சதவீதம் கமிஷன் என கூறி திரிவது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement