Load Image
dinamalar telegram
Advertisement

சட்டை, பனியன் அகற்ற உத்தரவு ; அறநிலைய துறையிடம் புகார்



பெங்களூரு-கோவில்களில் சட்டை, பனியனை அகற்றிய பின், உள்ளே செல்ல வேண்டும் என்ற விதிமுறைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.


இது குறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.தட்சிண கன்னடா, சுள்ளியாவின், குக்கே சுப்ரமண்யா கோவில், கொல்லுார் மூகாம்பிகை கோவில்களில், ஆண்கள் சட்டை, பனியன் அணிந்து உள்ளே செல்ல அனுமதி இல்லை. கழற்றி வைத்து சுவாமி தரிசனத்துக்கு செல்ல வேண்டும். இது பற்றி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மங்களூரு தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், ஹிந்து அறநிலையத் துறையிடம், எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.'ஹிந்து சம்பிரதாயத்தில், இத்தகைய நடைமுறை இல்லை. இந்த நடைமுறை, பக்தர்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 'தோல் நோய் உள்ளவர்கள், சட்டையை கழற்றினால் மற்றவருக்கும் பரவும் வாய்ப்புள்ளது. மாற்றுத் திறனாளிகள், சட்டையை கழற்றி வைத்து தரிசனம் செய்வது கஷ்டம். 'இது அடிப்படை உரிமை மீறலாகும். கோவிலில் பொருத்தப்பட்ட பலகைகளை அப்புறப்படுத்த வேண்டும்' என, புகாரில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement