Load Image
dinamalar telegram
Advertisement

மாணவர்கள் புகை பிடிப்பதை கண்டித்த ஆசிரியர்கள் சஸ்பெண்ட்; இடமாற்றம்

Tamil News
ADVERTISEMENT

ஆரணி : மாணவர்கள் புகைப்பிடிப்பதை கண்டித்த ஆசிரியர்களில் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்; இருவரை இடமாற்றம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது.

சில நாட்களுக்கு முன், அப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவர் ஒருவர், பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, நண்பர்களுடன் சிகரெட் குடித்து, மாணவியரின் முகத்தில் புகையை விட்டு கேலி, கிண்டல் செய்துள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவியர், அவர்களது பெற்றோர், ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
Latest Tamil News
இதையடுத்து, ஆசிரியர்கள் வெங்கடேசன், திலீப்குமார், நித்தியானந்தம், பாண்டியன் ஆகியோர் புகைப்பிடித்த மாணவரை கண்டித்துள்ளனர். அப்போது மாணவருக்கு உள்காயம் ஏற்பட்டதாக கூறி, ஆரணி அரசு மருத்துவமனையில் மாணவரை சேர்த்த பெற்றோர், ஆரணி போலீசில் புகாரளித்தனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, புகார் பெட்டி வைத்து மாணவ, மாணவியரிடம் கருத்து கேட்டார்.அதன் அடிப்படையில், ஆசிரியர்கள் திலீப்குமார், வெங்கடேசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தும், நித்யானந்தத்தை கேளூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், பாண்டியனை முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் இடமாற்றம் செய்து, நேற்று உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (73)

  • Ramanathan Muthiah - Madras,இந்தியா

    நல்லா வேண்டும் இந்த ஈன ஆசிரியர்களுக்கு ‼️விடியல் ஆட்சியை ஜெயிக்க வைத்தார்கள் அல்லவா 👆🏿இதுவும் வேண்டும், இன்னமும் நிறைய அனுபவிக்க போகிறார்கள் 2024 வரைக்கும் 😂😂😂 இதற்கு பிஜேபி அண்ணாமலையார் தான் சரியான தீர்வு 🙏🏽 பார்க்கலாம் மக்கள் என்ன செய்யபோகிறார்கள் என்று ⁉️ டிவியை பார்த்து மாநாட, மயிலாட, ஆட்டம் பார்த்து ஓட்டு போட போகிறார்களா, அல்லது சினிமா கூத்து நடிகர்கள் சொல்வது போல "ஹிந்தி தெரியாது போ " என்று போலி வசனத்தை பார்த்து ஒட்டு போட போகிறார்களா ⁉️ திராவிடமா அல்லது பாரத தேசியமா என்று மக்களே முடிவு பண்ணட்டும் 🙏🏽🙏🏽🙏🏽🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • T.siva - Tvmalai,இந்தியா

    கண்டிக்கப் படாத மாணவன் தண்டிக்கப் படுவான். மாணவனை கண்டிப்பவர்கள் உலகில் இருவர்தான்,1.பெற்றோர்கள்2.ஆசிரியர்கள் இந்நிலையில் கண்டித்த ஆசிரியர்கள் தண்டிக்கப் பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. மாணவ சமுதாயம் உருப்பட வழியில்லை. கண்டிப்புடன் கடமை உணர்வுடன் போதிக்கும் ஆசிரியர்களை காவு வாங்கும் பெட்டி மாணவர் மனசு பெட்டி.

  • Subbiah Perumal - Madurai,இந்தியா

    ஆசிரியர்களை இடமாற்றம் செய்தது தவறு தவறாக நடக்கும் மாணவர்கள் கண்டிக்கப்பட்டால்தான் அடுத்த தலைமுறை நன்றாக வாழமுடியும்.

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    முன்னெல்லாம் ஆசிரியர்களை சிற்பி என்று குறிப்பிடுவாங்க. விடியல் அரசு போன வாரம் முதல் மாணவர்களை SIRPI ஆக்கி இருக்கிறது.

  • DVRR - Kolkata,இந்தியா

    வட்ட செயலாளர்கள் சிகரெட் வியாபாரம் படுத்து விடும் இந்த மாதிரி எல்லாம் மாணவர்களை சிகரெட் பிடிக்கக்கூடாது என்று சொன்னால். விரைவில் எதிர்பாருங்கள் மாணவர்கள் டாஸ்மாக் சரக்கு குடிக்க தடை விதித்த ஆசிரியர் சஸ்பெண்ட் ஆகப்போகின்றார்

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்