Load Image
dinamalar telegram
Advertisement

ரூ. 3.79 கோடி மருத்துவ திட்ட பணிகள் துவக்கம்

திருநெல்வேலி:திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் 3.79 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள், மருத்துவ திட்ட பணிகளை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.துாத்துக்குடி மாவட்டத்தில் 1.05 கோடி ரூபாயில் கட்டடங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் இரு துணை சுகாதார நிலைய கட்டடங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் உட்பட 2.74 கோடி ரூபாயிலான திட்ட பணிகளை அமைச்சர் துவக்கினார்.திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த இந்த நிகழ்வில் கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார். சபாநாயகர் அப்பாவு, எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், ரூபி மனோகரன் பங்கேற்றனர்.அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:மக்கள் தொகை, தேசிய நெடுஞ்சாலையை கணக்கில் கொண்டு வள்ளியூரில் தலைமை மருத்துவமனை அமைகிறது. அம்பாசமுத்திரத்திலும் ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனை அமைகிறது. நாங்குநேரியில் 10 கோடி ரூபாயில் விபத்து சிகிச்சை மருத்துவமனை அமைகிறது. சென்னை மருத்துவமனையில் மட்டுமே இருந்த உடல் உறுப்பு தானத்திற்கான உரிமம் தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.ஏற்கனவே அரசு விழாவில் பா.ஜ., - எம்.எல்.ஏ., நயினார் நகேந்திரன் கேட்ட திட்டங்களை தந்தமைக்காக முதல்வர் ஸ்டாலினை அவர் பாராட்டினார். மேலும் நான்கு முறை போனில் பேசி விழாவுக்கு அழைத்த அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement