Load Image
dinamalar telegram
Advertisement

ஒன்பது நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடம் காலி

கோவை:கோவையில், ஒன்பது நீதிமன்றங்களில், நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 55க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஒன்பது நீதிமன்றங்களில், நீதிபதி பணியிடம் நீண்டகாலமாக காலியாக இருக்கிறது. கோவை முதலாவது கூடுதல் சார்பு கோர்ட், நான்காவது கூடுதல் சார்பு கோர்ட், ஐந்தாவது கூடுதல் முன்சிப் கோர்ட், ஜே.எம்., 8, கூடுதல் மகளிர் கோர்ட், நில அபகரிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் மற்றும் நிரந்தர லோக்அதாலத், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகிய கோர்ட்களில், ஒரு ஆண்டுக்கும் மேலாக நீதிபதி பணியிடம் நிரப்பப்படவில்லை. கோவை ஜே.எம்., 2 மாஜிஸ்திரேட் மணிகண்டன், கடலுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, மாஜிஸ்திரேட் நியமிக்கப்படவில்லை. இதேபோல், பொள்ளாச்சி கூடுதல் முன்சீப் கோர்ட், பொள்ளாச்சி ஜே.எம்., 2, மேட்டுப்பாளையம் முன்சீப் கோர்ட், வால்பாறை முன்சீப் கோர்ட் ஆகிய நீதிமன்றங்களில், நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. நீதிபதி இல்லாத கோர்ட்களில், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement