Load Image
dinamalar telegram
Advertisement

மிதக்கும் சோலார் திட்டம்; மாநகராட்சி ஆலோசனை

கோவை:சுவிட்சர்லாந்து துாதரகத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் 'கெப்பாசிட்டீஸ்' திட்டம் தொடர்பாக, கோவை மாநகராட்சியில் நேற்று ஆலோசிக்கப்பட்டது.சுவிட்சர்லாந்து துாதரகத்தின் உதவியுடன், கோவையில் செயல்படுத்தப்படும் 'கெப்பாசிட்டீஸ்' திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது. உள்ளூர் சுற்றுச்சூழல் முன்னெடுப்புக்கான சர்வதேச கவுன்சில் உறுப்பினர்களுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்த்து, மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து, கமிஷனர் பிரதாப் கலந்துரையாடினார்.குப்பையில் இருந்து எரிவாயு தயாரிப்பது; மிதக்கும் சோலார் ஆகிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து, பலரும் கருத்துகள் தெரிவித்தனர். மாநகர பொறியாளர் அரசு, உதவி நிர்வாக பொறியாளர் செந்தில்பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement