Load Image
dinamalar telegram
Advertisement

பள்ளி மாணவ, மாணவியருடன்உலக சுற்றுலா தின கொண்டாட்டம்

Tamil News
ADVERTISEMENT
கோவை:உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு சுற்றுலா தலங்களை சுற்றிக்காண்பிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.கோவை சுற்றுலா முகவர் சங்கம், சுற்றுலாத்துறை மற்றும் கோவை அரசு கலைக்கல்லுாரி இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். உக்கடம் பெரிய குளம் 'செல்பி பாயிண்ட்'டில் இருந்து பலுான்களை பறக்க விட்ட கலெக்டர் சமீரன், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.உதவி சுற்றுலா அலுவலர் துர்கா தேவி, கோவை சுற்றுலா முகவர் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் வசந்தகுமார், பொருளாளர் விமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 8ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பை சேர்ந்த 110 மாணவ, மாணவியர், உக்கடம் பெரிய குளம் செல்பி பாயிண்ட், ஜி.டி., அருங்காட்சியகம், வன அருங்காட்சியகம், வேளாண் பல்கலை பூச்சியியல் அருங்காட்சியகம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement