Load Image
dinamalar telegram
Advertisement

கட்டட வரைபட அனுமதி கையெழுத்துஒரே இடத்தில் பதிவு நடைமுறை தேவை! சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் வலியுறுத்தல்

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர்:கட்டட அனுமதிக்கான வரைபடத்தில் கையெழுத்திட, ஒரே இடத்தில் பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டுமென, சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை விடுத்துள்ளது.திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன், ஆண்டு பொதுக்குழு கூட்டம், வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, சங்க தலைவர் ஸ்டாலின் பாரதி தலைமை வகித்தார்.சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், செயல் அறிக்கையையும், பொருளாளர் பாரதிராஜா, வரவு - செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி, டிச., 30ல் துவங்கி ஜன., 2ம் தேதி வரை நடக்க உள்ளது. அதற்கான கண்காட்சி கையேட்டை, ஸ்டாலின் பாரதி வெளியிட, கண்காட்சி தலைவர் துரைசாமி பெற்றுக்கொண்டார்.திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சி குழுமம் அமைத்துள்ளதற்கும், குழும உறுப்பினராக சங்கத்தின் முன்னாள் தலைவர் சண்முகராஜ் நியமனத்துக்கு அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனுமதி பெற்று கட்டும் கட்டடங்களில் விதிமீறல் இருந்தால், பதிவு பெற்ற இன்ஜினியர்கள் தான் பொறுப்பு என்ற முடிவை நீக்க வேண்டும்.கட்டட அனுமதிக்கான வரைபடத்தில் கையெழுத்திட, உள்ளூர் திட்டக்குழுமம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என, ஒவ்வொரு இடத்திலும் பொறியாளர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதை மாற்றி, ஒரே இடத்தில் பதிவு செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னாள் தலைவர் முரளி, துணை தலைவர் பழனிசாமி, துணை செயலாளர் பிரகாஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement