Load Image
dinamalar telegram
Advertisement

மாநகராட்சியில் பயிற்சியுடன்கூடிய பணிக்கு அழைப்பு

திருப்பூர்:தமிழக நகர்ப்புற பயிற்சி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், ஆறு மாத காலம், உதவி தொகையுடன், பயிற்சியுடன் (இன்டெர்ன்ஷிப்) கூடிய வேலை வாய்ப்புகள் பின் வரும் பிரிவுகளில் வழங்கப்படுகிறது.சிவில், எலக்ட்ரிக்கல், ஆர்கிடெக்ட், என்விரான்மென்ட், அர்பன் பிளானிங், மெக்கானிக்கல், கெமிக்கல் ஆகிய பிரிவுகளில் சைட் இன்ஜினியர் பணி. இதற்கு உரிய பிரிவுகளில் பி.இ., அல்லது பி.டெக்., படித்திருக்க வேண்டும்.பி.காம்., பி.சி.ஏ., மற்றும் பி.பி.ஏ., பட்டதாரிகள் நிதி மேலாண்மை மற்றும் கணக்கு பிரிவில் பயிற்சியாளர் பணிக்கும், மெகட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் சிஸ்டம் இன்ஜினியர் பணிக்கும், சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு, பி.எஸ்சி., -பி.இ., - பி.ெடக்., முடித்தோரும், கார்டன் மற்றும் பார்க் பராமரிப்புக்கு பி.எஸ்சி., தோட்டக்கலை முடித்தோரும் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு மாநகராட்சி பொறியியல் பிரிவை, 0421 2240153 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தகுதியும் விருப்பமும் உடையோர் www.internship.nicte.india.org என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement