Load Image
dinamalar telegram
Advertisement

முழுமை பெறாத தார் ரோடு:கிராமத்தில் மக்கள் அவதி

பொங்கலுார்:பொங்கலுார் பெரியாரியபட்டி முதல் கண்டியன் கோவில் வரை செல்லும் ஒரு கி.மீ., நீள ரோடு கடந்தாண்டு தார் சாலையாக மாற்றப்பட்டது.ஆனால், 200 மீட்டர் நீளத்திற்கு மட்டும் ரோடு போடப்படாமல் மண் ரோடாக உள்ளது. இந்த மண் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் வெள்ளம் காரணமாக மண் ரோடு அதிக அளவில் அரித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.புதிதாக ரோடு போட்டும் அந்த ரோட்டை பயன்படுத்த முடியாமல் உள்ளூர் மக்கள் தவிக்கின்றனர். தார் ரோட்டை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement