Load Image
dinamalar telegram
Advertisement

சொந்த ஊரில் தீபாவளி பண்டிகை:அரசு பஸ்சில் முன்பதிவு துவக்கம்

திருப்பூர்:தீபாவளி பண்டிகைகான அரசு பஸ் டிக்கென் முன்பதிவு துவங்கியுள்ளது. முன்கூட்டியே முன்பதிவு செய்தால், இருக்கையை உறுதி செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.அடுத்த மாதம், 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கொரோனாவுக்கு பின், அரசு பஸ் டிக்கெட் முன்பதிவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வகையில், அறுபது நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பதில், முப்பது நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.அவ்வகையில், தீபாவளி பண்டிகை பயணத்துகான முன்பதிவு நேற்று துவங்கியது. இன்னும் ஒரு மாதம் இருப்பதால், தற்போதைக்கு முன்பதிவுக்கென தனி மையம் எதுவும் திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் திறக்கப்படவில்லை. www.tnstc.com என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.முன்பதிவை பொறுத்தே சிறப்பு பஸ் இயக்கம் குறித்து போக்குவரத்து கழகம் முடிவெடுக்கும் என்பதால், கடைசி நேர சிரமத்தை தவிர்க்க, குழுவாக பயணிப்போர் முன்கூட்டியே முன்பதிவு செய்தால், இருக்கையை உறுதி செய்து கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement