Load Image
dinamalar telegram
Advertisement

குழாய் உடைந்து குடிநீர் வீண்தண்ணீர் தேங்கி சாலை சேதம்

திருப்பூர்:கொங்கு மெயின் ரோடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வெளியேறி ரோடு சேதமடைந்துள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொங்கு மெயின் ரோடு பகுதி, ஊத்துக்குளி முதல் ரயில்வே கேட் பகுதியிலிருந்து துவங்குகிறது. இதில், சமீபத்தில் பாதாள சாக்கடை திட்ட குழாய் பதிப்பு பணிக்கு குழி தோண்டப்பட்டது.இப்பணியின் போது குடிநீர் சப்ளைக்கு பதிக்கப்பட்ட குழாய் சேதமானது. இரண்டு மாதங்களாகியும், குழாய் உடைப்பு சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதிக்கு குடிநீர் சப்ளையாகும் போது, உடைப்பிலிருந்து அதிகளவில் குடிநீர் வெளியேறி ரோட்டில் பாய்கிறது.ஏற்கனவே தோண்டிய நிலையில் கிடக்கும் ரோட்டில், குடிநீர் தேங்கி, குழி மேலும் பெரிதாகி வாகன ஓட்டிகள் பெரும் அவதியை ஏற்படுத்து கிறது. குழாய் உடைப்பு சரி செய்து, ரோடு போடும் பணியையும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement