Load Image
dinamalar telegram
Advertisement

காவலாளி கொடூர கொலைகறிக்கடைக்காரருக்கு ஆயுள்

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர்:தோட்ட காவலாளியின் தலையை துண்டித்து கொலை செய்த கசாப்பு கடைக்காரருக்கு திருப்பூர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், வி.கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 35; கோழிக்கறி கடை நடத்தி வந்தார். 2014 நவ., 14ல், கறிக்கடைக்கு இலை எடுத்து வர, கள்ளக்கிணறு வெங்கமடை தோட்டம் சென்றார்.அங்கு காவலாளி கலைமணி, 41, என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவேசமடைந்த செந்தில்குமார், கறி வெட்டும் கத்தியால் கலைமணியை தாக்கி கொலை செய்தார்.
கழுத்தை அறுத்து, தலை மற்றும் உடலை தனித்தனியாக சாக்கு மூட்டையில் கட்டி எடுத்து சென்று, பி.ஏ.பி., வாய்க்காலில் உடலையும், தலையையும் வீசி சென்றார்.இது தொடர்பாக, பல்லடம் போலீசார், விசாரித்து செந்தில்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் முதலாவது மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார். வழக்கில் செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி பத்மா தீர்ப்பு வழங்கினார். அதையடுத்து, கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement