Load Image
dinamalar telegram
Advertisement

சுற்றுலா துறை அமைச்சர்கள் கூட்டம்

சென்னை:அனைத்து மாநில சுற்றுலாத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில், தமிழக அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றார்.ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில், மத்திய சுற்றுலாத் துறை சார்பில், அனைத்து மாநில சுற்றுலாத் துறை அமைச்சர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன்ரெட்டி தலைமை வகித்தார்.
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத் துறை செயலர் சந்திரமோகன் ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டம் முடிந்த பின், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, இணை அமைச்சர்கள் அஜய்பட், ஸ்ரீபாத் நாயக் மற்றும் பிற மாநில அமைச்சர்களை, மதிவேந்தன் சந்தித்து பேசினர்.
ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், பாரம்பரிய தொப்பி அணிவித்து, மதிவேந்தனை வரவேற்றார். அவருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும், தமிழக அரசு சார்பில் குத்து விளக்குளை, மதிவேந்தன் நினைவுப் பரிசாக வழங்கினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement