Load Image
dinamalar telegram
Advertisement

ஆர்.ஏ.எப்., படையினர்கோவையில் அணிவகுப்பு

Tamil News
ADVERTISEMENT
கோவை:கோவையில் போலீசாரும், அதிவிரைவு அதிரடிப்படையினரும் (ஆர்.ஏ.எப்.,) நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.

காந்திபுரம் பஸ்ஸ்டாண்டில் தொடங்கி கிராஸ்கட் ரோடு, படேல் ரோடு வழியாக நகரின் முக்கிய வீதிகளில் அணிவகுத்துச் சென்றனர். மற்றொரு பட்டாலியன் அணியினரும், போலீசாரும், கரும்புக்கடையில் இருந்து குனியமுத்துார் வரையிலும் அணிவகுத்துச் சென்றனர்.ஏ.டி.ஜி.பி., ஆய்வுகோவையில் கெரசின் குண்டுகள் வீசப்பட்டதால் பதட்ட நிலை உருவாகியுள்ளது.

நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., தாமரைக்கண்ணன் நேற்று கோவை வந்தார். அவர், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.நகரில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஏ.டி.ஜி.பி., அறிவுரை வழங்கினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement