Load Image
dinamalar telegram
Advertisement

கால்நடை மருத்துவ படிப்புகால அவகாசம் நீட்டிப்பு

சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் செயல்படும் கல்லுாரிகளில், ஐந்தரை ஆண்டு படிப்புகளான, கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பான பி.வி.எஸ்சி., மற்றும் ஏ.ஹெச்., உள்ளன.அதேபோல, நான்கு ஆண்டு உணவு, பால்வளம், கோழியின தொழில்நுட்பம் என்ற பி.டெக்., படிப்புகள் உள்ளன.

இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில், 12ம் தேதி துவங்கியது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் மாணவர் சேர்க்கையில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர்கள் விண்ணப்பிக்க வரும், 26ம் தேதி கடைசி நாளாக இருந்தது.விண்ணப்பிக்கும் அவகாசத்தை, அக்., 3ம் தேதி வரை நீட்டித்து, பல்கலை அறிவித்துள்ளது.

அயல்நாடு வாழ் இந்தியர், அவர்களின் வாரிசுகள், அவர்களின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்., 14 மாலை 5:00 மணி வரை 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement