Load Image
dinamalar telegram
Advertisement

21 மாவட்டங்களுக்கு தி.மு.க.,வில் மனு

சென்னை:தி.மு.க., மாவட்ட செயலர் தேர்தலில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில்பாலாஜி, மகேஷ் உட்பட 21 பேர், மனு தாக்கல் செய்தனர்.
சென்னை அறிவாலயத்தில் நேற்று முன்தினம், 19 மாவட்ட செயலர் பதவிக்கு போட்டியிடும் கட்சியினர் மனுத் தாக்கல் செய்தனர்.இரண்டாவது நாளான நேற்று, கரூர் மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி, ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி, திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் மகேஷ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.சேலம் மேற்கு மாவட்டத்திற்கு செல்வகணபதி, ரவிச்சந்திரன்; நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு மதுரா செந்தில்; நீலகிரி மாவட்டத்திற்கு முபராக் உட்பட, 21 மாவட்டங்களுக்கு மனு தாக்கல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement