Load Image
dinamalar telegram
Advertisement

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய இயக்குனர் நியமனம்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி :புதுடில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குனராக எம்.ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய பணியாளர் மற்றும்பயிற்சி துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:தெலுங்கானா மாநிலம்ஹைதராபாதிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லுாரி குழந்தைகள் நலப் பிரிவு துறைத் தலைவராக உள்ள டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ், புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Latest Tamil News அடுத்த ஐந்து ஆண்டுகள்அல்லது 65 வயது பூர்த்தியடைவது, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை ஸ்ரீனிவாஸ் இந்தப் பதவியில் இருப்பார்.புதுடில்லி எய்ம்சில், 2017 முதல் இயக்குனராக இருந்த ரந்தீப் குலேரியா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இவருக்கு ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்-பட்டு இருந்தது. அதுவும் நேற்று முடிவடைந்தது.ஸ்ரீனிவாஸ் நியமனத்துக்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (8)

  • venugopal s -

    கட்டாத மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பாஜக பெயர் வைக்கப்போகிறதாமே!

  • Sampath Kumar - chennai,இந்தியா

    ஸ்ரீனிவாச , பாஸ்கர , பாலாஜி ,கோவிந்த கோவிந்தா மதுரை அய்ய்ம்ஸ் கோவிந்தா

    • Bala - chennai,இந்தியா

      பெருமாள் பேரை சொல்லி புண்ணியம் தேடறீங்க, வாழ்த்துக்கள்

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    ஐயா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 95% கட்டி முடிச்சாசி . ஆனா இப்போ காணம் ஐயா. கண்டுபிடிச்சி குடுங்க ஐயா ..

    • Bala - chennai,இந்தியா

      விடியல் ஆட்டைய போட்டுருப்பாங்களோ?

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    டியர் சார், அவர் மதுரை எய்ம்ஸ் ஆஸ்ப்பிட்டல் 95% பினிஷ் ஹை. நட்டா மீட்டிங் டெல் ஹை. டுடே ஆஸ்ப்பிட்டல் காணவில்லை ஹை. ப்ளீஸ் ஃபைண்ட்.. டாங்க்கூ .

    • Bala - chennai,இந்தியா

      நம்ம மதுரை டுமீல் ஹிந்தி பேசினா இப்படித்தான் இருக்கும் ஒய் ஹீ ஹீ ஹீ

Advertisement