Load Image
dinamalar telegram
Advertisement

குறு, சிறு, நடுத்தர தொழில்கள் செயல்பாடுமத்திய இணை அமைச்சர் வர்மா பெருமிதம்

தஞ்சாவூர்:"நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன,'' என, மத்திய குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்தார்.
ஞ்சாவூரில் தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மையம் சார்பில், தேசிய எஸ்.சி., - எஸ்.டி. தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்றது.மாநாட்டில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழக அரசின் தலைமை கொறடா செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் மத்திய குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை என அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா பேசியதாவது:குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோரால், இந்தியப் பொருளாதாரத்திற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது.மேலும், வலுவான மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் ஆறு கோடிக்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவங்கள் சுமார் 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இதன் மூலம், 11 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த துறையில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.இன்றைய நிலவரப்படி, 1.09 கோடி பேர் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான நிறுவனப் பதிவு போர்ட்டலில் தொழில் தொடங்க பதிவு செய்துள்ளனர். அவற்றில் 11.46 லட்சம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
தற்போதுள்ள எஸ்.சி., - எஸ்.டி., தொழில் முனைவோரின் திறனை வளர்க்கவும், புதிய நிறுவனங்களை உருவாக்கவும், உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் உள்ள எஸ்சி., - எஸ்.டி.,யினர் துறை சார்பில், ஆலை மற்றும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க 25 சதவீதம் மூலதன மானிய கடன் வழங்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை அனைவருக்கும் வழங்குவதன் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களை புதிய உயரத்துக்கு கொண்டு சென்று, தமிழகத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.மாநாட்டில் தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோராக செயல்பட்டு வரும் 10க்கும் மேற்பட்டவர்களை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement